கடந்த 2009ஆம் ஆண்டு, இலங்கையில் நடந்த இறுதி போரின்போது ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்ததை நினைவு கூறும் விதமாக பிரான்சில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது.
இலங்கையில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த போர் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி முடிவுக்கு வந்தது.
இறுதி போரில் கொல்லப்ட்ட தமிழ் மக்கள்

இலங்கையில் நடந்த இறுதி போரின்போது ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்தனர். மேலும், ஒரே நாளில் பலர் கூட்டமாக கொல்லப்பட்டனர்.
இந்த நாளை நினைவுக்கூறும் விதமாக, உலகம் முழுவதும் தமிழ் மக்களும் மனித உரிமை ஆதரவு அமைப்புகளும் ஆண்டுதோறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தி, போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுக்கூர்வதோடு, நீதிக்கான கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். மறக்க முடியாத இந்த துயர நாளில், தமிழர்களின் நீதி தேடல் பதினாறு ஆண்டுகள் கழித்தும் இன்றும் தொடர்கிறது.
தமிழ் இளைஞர்கள் பேரழிச்சியுடன் அஞ்சலி

தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் பிரான்சில் இன்று அனுசரிக்கப்பட்டது.
பாரிஸ் நகரில் Place de la Republique பகுதியில் தொடங்கிய கவனயீர்ப்புப் பேரணி, Place de la Bastille பகுதியில் நிறைவடைந்தது
பேரணிக்கு பின் place de bastille பகுதியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் முன்பாக ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது
ஈகைச் சுடரை முள்ளிவாய்க்கால் மண்ணில் உறவுகளை இழந்த குடும்ப உறுப்பினர் ஒருவர் ஏற்றினார். நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.



