நாட்டின் பல பகுதிகளில் இன்று (31.05.2026) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையில் இந்த தகவலை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிற்பகலுக்கு பின்னர் மழை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழையுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழையுடன் கூடிய காலநிலை இன்று தொடரும்.

மேலும், மின்னல் தாக்கங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் காணப்படுவதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து வெளியிடப்படும் வானிலை அறிவிப்புகளை கவனமாக பின்பற்றுமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.