அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் 39 நாடுகளைச் சேர்ந்த மக்களின் புகலிடம், பணி அனுமதி, கிரீன் கார்டு மற்றும் குடியுரிமை விண்ணப்பங்களை முடக்கி வைத்திருந்த குடியேற்றக் கொள்கையை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் சட்டவிரோதமானது என அறிவித்து ரத்து செய்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் வொஷிங்டனில் இரண்டு தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த குடியேறி ஒருவர் மீது அதிகாரிகள், நடவடிக்கையை மேற்கொண்டது.
தேசிய பாதுகாப்பு காரணம் காட்டி விதிக்கப்பட்ட தடைகள்.

தேசிய பாதுகாப்பு மற்றும் பின்னணி சரிபார்ப்பு தேவைகளை காரணமாகக் காட்டி, ஆப்கானிஸ்தான், ஈரான், ஹைட்டி, சோமாலியா, வெனிசுலா, சிரியா உள்ளிட்ட 39 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைவதில் முழுமையான மற்றும் பகுதியளவிலான தடைகளை நிர்வாகம் விதித்தது.
இந்த முடிவின் காரணமாக ஆப்பிரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சட்டப்பூர்வமாகச் சமர்ப்பித்த விண்ணப்பங்கள் பல மாதங்களாக நிலுவையில் நீடித்தன.
குடியேற்ற விண்ணப்பங்கள் மாதக்கணக்கில் நிலுவை.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஜான் மெக்கானெல், இந்த நடவடிக்கை நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு முரணானது என்று குறிப்பிட்டு அதனை ரத்து செய்தார்.விண்ணப்பதாரர்கள் எந்தத் தவறும் செய்யாத நிலையில், அவர்கள் பிறந்த நாட்டின் அடிப்படையில் பாகுபாடு காட்டி அவர்களின் வாழ்க்கையை பாதிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்று நீதிபதி வலியுறுத்தினார்.
