மரண தண்டனை கைதி உயிர் மாய்ப்பு

யாழ் சிறைச்சாலையில் மரண தண்டனை கைதி ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையை முழுவதும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய மிக முக்கிய குற்றச்சம்பவங்களில் ஒன்றாக கருதப்படும் , 2015 மே மாதத்தில் யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவி வித்யா கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் கைது செய்யப்பட்ட மரண தண்டனை கைதி ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். யாழ். சிறைச்சாலையில் இன்று காலை அவர் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரியவந்துள்ளது

நடந்தது என்ன?

இந்த கொலை வழக்குடன் தொடர்புடைய நபரான பூபாலசிங்கம் ஜெயகுமார் என்ற கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட இருந்த நிலையிலேயே குறித்த கைதி தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

Share This Article