கொழும்பு - பேலியகொட பகுதியில் உள்ள துட்டுகெமுனு மாவத்தையில் இடம்பெற்ற கூரிய ஆயுதத் தாக்குதலில் 51 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.ம்பவம் நேற்று (24) இடம்பெற்றதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து உயிரிழந்தவர் திவுலங்கடவல, விகாரகமவில் பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். மேலும், இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலின் போது வாக்குவாதம் வன்முறையாக மாறிய நிலையில், ஒருவரால் கூரிய ஆயுதம் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த நபர் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தேடும் பொலிஸார்

சம்பவத்திற்குப் பின்னர் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் பலர் சம்பவத்தில் தொடர்புடையவர்களா என்பது குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தாக்குதலுக்கான காரணம் தொடர்பிலும் பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.