தமிழர்கள் பயணிக்கும் விமான நிலையத்தில் அதிர்ச்சி மோசடி.

தமிழர்கள் அதிகம் பயணிக்கும் விமான நிலையத்தில் அதிர்ச்சி மோசடி.

கனடாவின் ரொரன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் பெரியளவிலான போதைப்பொருள் கடத்தல் மோசடி ஒன்று அம்பலமாகியுள்ளது. தமிழர்கள் அதிகம் பயணிக்கும் இந்த விமான நிலையத்தில் பயணிகளின் பொதிகளை மாற்றி, போதைப்பொருட்களை கடத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் ஆறு பேரை கைது செய்துள்ளனர். விசாரணைகளின் படி, குற்றவாளிகள் எந்த தொடர்பும் இல்லாத சாதாரண பயணிகளின் பொதிகளை பயன்படுத்தி போதைப்பொருட்களை பல நாடுகளுக்கு அனுப்பியுள்ளனர்

விமான நிலையத்தின் உள்துறை உதவி பெறப்பட்டதா?

விசாரணை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின் படி, பயணிகள் விமானத்தில் ஒப்படைக்கும் பொதிகளில் உள்ள அடையாள Tag-களை விமான நிலைய ஊழியர்கள் ரகசியமாக அகற்றியுள்ளனர். பின்னர் அந்த Tag-களை போதைப்பொருட்கள் நிரப்பப்பட்ட வேறொரு சூட்கேஸில் ஒட்டியுள்ளனர்.

      இதன் மூலம் எந்த சந்தேகமும் இல்லாத பயணிகளின் பெயரில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த மோசடிக்கு விமான நிலையத்தின் உள்துறை உதவி கிடைத்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..

இந்த சம்பவம் காரணமாக 17 பயணிகள் பல்வேறு நாடுகளின் விமான நிலையங்களில் கைது செய்யப்பட்டதுடன், சட்ட நடவடிக்கைகளுக்கும் முகங்கொடுத்துள்ளனர்.

இதனால் ரொரன்ரோ விமான நிலையம் ஊடாக பயணிக்கும் தமிழர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பயணிகள் தங்கள் பொதிகளின் புகைப்படங்களை முன்கூட்டியே பதிவு செய்து வைத்திருக்கவும், Check-in செய்யப்பட்ட பின்னரும் பொதிகளின் தகவல்களை அவ்வப்போது சரிபார்க்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன், அந்நியர்களிடமிருந்து எந்தப் பொருளையும் பொறுப்பேற்கவோ எடுத்துச் செல்லவோ கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share This Article