மத்திய கிழக்கு மோதல் நிறுத்த அழுத்தம்.

ட்ரம்ப்–நெதன்யாகு தொலைபேசி உரையாடல் சர்ச்சை: உலக அரசியல் அதிர்வு.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றத்தை குறைக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிர பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வரும் நிலையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை “பைத்தியக்காரர்” என்று அழைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது, நெதன்யாகுவின் நடவடிக்கைகள் உலகளவில் இஸ்ரேலுக்கு எதிரான மனநிலையை உருவாக்கி வருவதாக ட்ரம்ப் கடுமையாக விமர்சித்ததாக தகவல்கள் வெளியாகின.

மோதலை நிறுத்த வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தல்.

“நான் மட்டும் இல்லையென்றால் நீ இப்போது சிறையில் இருப்பாய். நீ செய்கிற செயல்களால் உலகம் முழுவதும் இஸ்ரேலை வெறுக்க ஆரம்பித்துள்ளது” என்று ட்ரம்ப் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

மேலும், “இந்த சண்டையை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று தாம் வலியுறுத்தியதாக ட்ரம்ப் தெரிவித்தார். அதேவேளை, நெதன்யாகுவுடன் தனது தனிப்பட்ட உறவு இன்னும் நல்ல நிலையில் தொடர்கிறது என்றும் அவர் கூறினார்.

முழு உரையாடலை வெளியிட மறுத்த நெதன்யாகு.

ட்ரம்பின் கடுமையான கருத்துகள் குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தொலைபேசி உரையாடலின் முழு விவரங்களையும் வெளியிட மறுத்தார்.

இந்நிலையில், ஈரான், லெபனான் மற்றும் இஸ்ரேல் தொடர்பான பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், பெரும் பிராந்திய மோதலைத் தடுக்க அமெரிக்கா தொடர்ந்து இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

Share This Article