ஈரான் போர் விவகாரத்தில் ட்ரம்ப் அதிருப்தி.

கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிய டொனால்ட் ட்ரம்ப்.

அமெரிக்கா–ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வெள்ளை மாளிகையில் நடந்த முக்கிய கூட்டத்தில் எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. கருத்து வேறுபாடுகள் அதிகரித்ததால் டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தியடைந்து கூட்டத்தில் இருந்து வெளியேறினார். முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், கத்தாரின் மத்தியஸ்தத்துடன் இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்த வரைவு ஆரம்பத்தில் இரு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை

வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது, வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகளில் பாதி தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஈரான் வலியுறுத்தியது.

மொத்தமாக 2.28 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளில் குறைந்தது 1.14 லட்சம் கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என ஈரான் நிபந்தனை முன்வைத்தது.

அமைதி ஒப்பந்தத்துக்கு தொடரும் தடைகள்.

இந்த கோரிக்கை ட்ரம்பை கடுமையாக ஆத்திரமடையச் செய்தது. கூட்டத்தில் இருந்து வெளியேறிய அவர், “மறு அறிவிப்பு வரும் வரை ஈரானுக்கு எந்த பணப் பரிமாற்றமும் செய்யப்படாது” எனத் தெளிவாக தெரிவித்தார்.

ஹோர்முஸ் நீரிணை திறப்பு மற்றும் ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நிலவுகின்றன.

Share This Article