ஆசியாவில் வெப்பநிலை உயர்வுக்கு எச்சரிக்கை.

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு காலநிலை எச்சரிக்கை.

ஒரு தசாப்தத்திற்குப் பிறகு மிகவும் வலுவான எல்-நினோ (El Niño) காலநிலை மாற்ற நிலை உருவாகும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த காலநிலை மாற்றம் ஆசியாவின் பல நாடுகளில் கடுமையான வெப்பநிலை உயர்வையும் மழைவீழ்ச்சி குறைப்பையும் ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டின் ஜூன் முதல் ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் எல்-நினோ தாக்கம் ஆரம்பமாகலாம். இந்த நிலைமை நவம்பர் மாதம் வரை நீடிக்கக்கூடும் என்றும், அதன் தாக்கம் இலங்கையில் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரை தொடரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எல்-நினோ காரணமாக வெப்பநிலை அதிகரிப்பு.

குறிப்பாக சாதாரண மழைவீழ்ச்சி குறைவடைந்து வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கிலிருந்து வீசும் காற்று நீரோட்டங்கள் வெப்பமான அலைகளை ஆசிய பிராந்தியத்தை நோக்கி தள்ளுவதால் வளிமண்டல வெப்பநிலை மேலும் உயரும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனால் இலங்கை, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் கடுமையான வறட்சி நிலையை எதிர்கொள்ள நேரிடலாம்.

காலநிலை மாற்றம் குறித்து ஐ.நா. எச்சரிக்கை.

மழைவீழ்ச்சி குறைவதால் பயிர்ச்செய்கை பாதிக்கப்படலாம் என்றும், உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்தில் சிக்கல்கள் உருவாகலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நீண்டகால வறட்சி நிலை தொடர்ந்தால் பல நாடுகள் பொருளாதார மற்றும் உணவுப் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Share This Article