அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்ற நிலையை முடிவுக்குக் கொண்டு வந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி ஈரானை சென்றடைந்துள்ளார்.
இந்த பயணத்தின் போது பிராந்திய அமைதி மற்றும் இருதரப்பு உறவுகள் தொடர்பான முக்கிய விடயங்களும் இந்த சந்திப்புகளில் பேசப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் வெளியுறவு அமைச்சருடன் முக்கிய சந்திப்பு.

அமெரிக்கா - ஈரான் உறவுகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் பதற்ற நிலையை குறைக்கும் வழிமுறைகள் குறித்து இருதரப்பும் கருத்துகளை பரிமாறிக் கொள்ளவுள்ளனர்.
மேலும், பிராந்திய பாதுகாப்பு, அரசியல் ஒத்துழைப்பு மற்றும் அமைதி முயற்சிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்புகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் எதிர்கால அரசியல் சூழ்நிலைக்கு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இராஜதந்திர தீர்வை வலியுறுத்தும் பாகிஸ்தான்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே உடன்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிகளில் பாகிஸ்தான் அண்மைக் காலமாக முக்கிய பங்காற்றி வருகிறது. இரு நாடுகளும் நேரடி மோதலை தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வை காண வேண்டும் என்பதே பாகிஸ்தானின் நிலைப்பாடாக உள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகள் அமைதிக்கான முன்னேற்றத்தை உருவாக்கி, பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை குறைக்க உதவும் என இராஜதந்திர வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.