பாடசாலை மாணவர்களிடையே வைரஸ் மூளைக்காய்ச்சல் பரவல் தீவிரம்

தேவையற்ற அச்சம் வேண்டாம் என வைத்தியர்கள் அறிவுரை

வைத்திய நிபுணர் பாலித கருணபெமஇலங்கையின் பல பகுதிகளில் பாடசாலை மாணவர்களிடையே வைரஸ் மூளைக்காய்ச்சல் தொற்று தற்போது பரவி வருவதாக தெரிவித்துள்ளார்

எனினும், இந்த நிலைமை குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் அல்லது பீதி கொள்ள வேண்டாம் என்றும், சுகாதார அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நோயை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்

நோயாளர் பதிவான பகுதிகள்

மேலும், நோய் தொடர்பான மேலதிக ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சில பகுதிகளில் புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுகாதார அதிகாரிகள் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் காதார அதிகாரிகள் முதலில் இந்த நோய்த்தொற்றை Deniyaya பகுதியில் அடையாளம் கண்டதாகவும், பின்னர் பல பகுதிகளிலும் நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். சமீபத்திய தகவல்களின் அடிப்படையில், தியத்தலாவை பகுதியில் 28 பேரும்,வெலிமடை பகுதியில் 13 பேரும்,கண்டி பகுதியில் 25 பேரும் பதிவாகியுள்ளனர்.

நோய் குறித்து முக்கிய குறிப்புகள்

அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, வாந்தி, உடல் சோர்வு அல்லது குழப்பநிலை போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையை அணுகுவது அவசியம். குறிப்பாக பாடசாலை மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதால், பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களின் உடல்நிலை குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவு மற்றும் தனிநபர் சுத்தம் ஆகியவற்றை பின்பற்றுவது நோய் பரவலைக் குறைக்க உதவும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார எச்சரிக்கை வெளியீடு

முறையான மருத்துவ சிகிச்சையின் மூலம் இந்த நோயை வெற்றிகரமாக குணப்படுத்த முடியும் என்று டாக்டர் கருணபெம குறிப்பிட்டார். சிகிச்சை பெற்ற பெரும்பாலான நோயாளிகள் ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் குணமடைவதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய்த்தொற்று தொடர்பாக தேவையற்ற அச்சத்தையும் தவறான தகவல்களையும் பரப்ப வேண்டாம் என்றும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நோய்ப்பரவலை கட்டுப்படுத்த தேவையான பல நடவடிக்கைகளை அதிகாரிகள் ஏற்கனவே முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது நிலவும் மழைக்கால சூழலும் வெசாக் பண்டிகை காலத்தில் நடைபெறும் தானசாலைகளும் காரணமாக மக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அசுத்தமான உணவு மற்றும் குடிநீர் மூலம் தொற்றுகள் வேகமாக பரவக்கூடும் என்பதால், மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி சுத்தமான உணவு மற்றும் குடிநீரை மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share This Article