அடுத்த நாடாளுமன்ற தலைவர் யார்?

அரசியல் தலைவர்களின் சவால்கள் சூடுபிடித்த விவாதம்.

இன்றைய தினம் நாட்டின் அரசியல் அரங்கில் இடம்பெற்ற பல முக்கிய நிகழ்வுகள் பரவலான கவனத்தை ஈர்த்தன.சர்வஜன பலய கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, நாட்டை நிர்வகிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் எந்த நேரத்திலும் பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். தற்போதைய சூழலில் நாட்டுக்கு உறுதியான தலைமைத்துவமும் மாற்றத்தைக் கொண்ட புதிய அணுகுமுறையும் தேவைப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

மற்றொரு புறம் நாமல் ராஜபக்ச அரசாங்கத்துக்கு நேரடி சவால் விடுத்தார். முடிந்தால் உடனடியாக தேர்தலை நடத்திப் பார்க்குமாறு அவர் தெரிவித்தார். அப்போது மக்களின் உண்மையான ஆதரவு யாருக்கு உள்ளது என்பது தெளிவாக தெரியவரும் எனவும் கூறினார்

விமல் வீரவன்ச கைது அரசியல் சர்ச்சையை தீவிரப்படுத்தியது.

போர் வீரர்கள் நினைவு நாளில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக விமல் வீரவன்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியிருந்தபோது பொலிஸார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த கைது சம்பவம் தொடர்பில் அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டனர்.

இவ்வாறான பல முக்கிய சம்பவங்கள் வெளியாகும் நிலையில், “நாட்டு நடப்புக்கள்” நிகழ்ச்சி மேலும் பல தகவல்களை வெளிக்கொண்டு வருகிறது.

Share This Article