ஹரிணி அமரசூரிய அவர்களின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என பிரதமரின் அலுவலகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. அண்மைக் காலமாக சில தரப்பினர் தவறான தகவல்களை திட்டமிட்டு பரப்பும் நோக்கில் போலி காணொளிகள், திருத்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தவறாக வழிநடத்தும் பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதமரின் நற்பெயருக்கு பாதிப்பு ..

அந்த அறிக்கையின்படி, தொழில்முனைவு வாய்ப்புகள், வேலைவாய்ப்பு அறிவிப்புகள், நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் வரிக் கொள்கைகள் தொடர்பான தவறான தகவல்கள் சமூக ஊடகங்கள் ஊடாக வேகமாக பரவி வருகின்றன. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மற்றும் நவீன டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்தி இந்த போலி பதிவுகள், காணொளிகள் மற்றும் தகவல்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், அரசாங்கத்திற்கும் அவர்களின் தனிப்பட்ட நற்பெயருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கில் சிலர் திட்டமிட்டு இத்தகைய தவறான செய்திகளை பரப்பி வருவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொதுமக்கள் கவனத்திற்கு,.

போலிச் செய்திகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பவோ பகிரவோ வேண்டாம் என பிரதமரின் அலுவலகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் நம்புமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் நம்புமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் நம்பகமான ஊடகங்களின் தகவல்களை மட்டுமே மக்கள் நம்ப வேண்டும் என்றும், உறுதிப்படுத்தப்படாத பதிவுகள் மற்றும் காணொளிகளை பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமரின் அலுவலகம் மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளது.