இலங்கையின் 2026 கல்விப் பொதுத் தராதர உயர்தர (G.C.E. A/L) பரீட்சையை ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடத்துவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புடன், 2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் உத்தியோகபூர்வ கால அட்டவணையையும் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
2026 உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 முதல் ஆரம்பம்.

2026 உயர்தரப் பரீட்சைக்கான உத்தியோகபூர்வ கால அட்டவணை தற்போது பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது பாடங்களுக்கான பரீட்சை தினங்கள் மற்றும் நேரங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் வகையில் இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை மையங்கள், அனுமதி அட்டைகள் மற்றும் பரீட்சை நடைமுறைகள் தொடர்பான தகவல்கள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 09 ஆம் திகதி.

இதனுடன், 2026 ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சியை ஆகஸ்ட் 09 ஆம் திகதி நடத்தவும் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை பரீட்சை நடைபெறும். நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்தப் பரீட்சையில் பங்கேற்க உள்ளனர்.
புலமைப்பரிசில் பரீட்சைக்கான ஏற்பாடுகளையும் திணைக்களம் முன்னெடுத்து வருவதுடன், மாணவர்களும் பெற்றோர்களும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை கவனமாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

