குழந்தைகள் மரணம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியீடுதந்தையின் வாக்குமூலங்களில் முரண்பாடு கண்டுபிடித்த பொலிஸார்.
தீ விபத்து தொடர்பில் பொலிஸார் ஆரம்பத்திலிருந்தே தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளின் போது குழந்தைகளின் தந்தை வழங்கிய பல வாக்குமூலங்களில் முரண்பாடுகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தைகள் மரணம் தொடர்பில் உண்மை.

சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் அதிகாரிகள் அவரை கைது செய்தனர். குழந்தைகள் உயிரிழக்க காரணமான சூழ்நிலைகள் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவம் நடைபெற்ற தங்கும் விடுதியில் இருந்த சிலரிடமும் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணை தீவிரம்.

தீ விபத்தில் உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் பிரேதப் பரிசோதனைகளை இன்று நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த பரிசோதனைகள் மூலம் குழந்தைகளின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து முக்கிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் ஜூன் மாதம் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.